பாராளுமன்த் தேர்தல்  பிரச்சார பேரணியை உ.பி., யில்  இருந்து தொடங்கும்  பாஜக 2014ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்த் தேர்தல் பிரச்சார பேரணியை பாஜக வரும் 21ம் தேதி உ.பி., மாநிலத்தில் இருந்து தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாஜ.,கட்சியின் தலைவராக நிதின் கட்காரி 2வது முறையாக

பொறுப்பேற்ற பின்பு அவர் தொடங்க உள்ள முதல் பேரணி இது . இதில், முன்னாள் பாஜக முதல் மந்திரி கல்யாண் சிங்கும் கலந்துகொள்கிறார் என பாஜக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

21ம் தேதி ஜூலி லால் பார்க்கில் நடக்கும் இந்தபேரணியில், கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் கலந்துகொள்வார்கள் என கூறப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் கல்யான்சிங் தனது ஜான் கரான்தி கட்சியை பாஜக.,வுடன் இணைக்கிறார்.

Leave a Reply