இந்து பத்திரிக்கை 150 ஆண்டுகளை கடந்தது சுதந்திர போராட்டத்தில் பெரும்பங்கு ஆற்றியது. இதெல்லாம் சரித்திரம ஆனால் 30 ஆண்டுகளாக அதன் செய்கைகள, செயல்பாடுகள, செய்திகள, கட்டுரைகள, தலையங்கங்கள, அத்தனையும் கடும்விமரசனத்துக்கு உள்ளாகின்ற வகையில் உள்ளது..

பொதுக் கருத்துக்கு எதிராக, இந்துசமுகத்தை அவதூறு செய்யும்_முறையில், சிகப்பு சித்தாந்ததின் அடி வருடியாக "இந்து" உள்ளது.

எவ்வளவோ கண்டனங்கள் வந்த பிறகும் அதன் எழுத்தை மாற்றிக் கொள்ளாதது மட்டுமல்ல மேலும் மேலும் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சும் முறையை தொடர்கிறது.

அதன் வெளிப் பாடாக நேற்றைய ( 3.1.13.) இதழில், ஒருகட்டுரை வெளியிட்டுள்ளத அதன் ஆசிரியர்பெயர் சஞ்சை ஸ்ரீவத்சவாவாம சிகப்பில் ஊறிசெஞ்சாயம் ஏறியவர் போலுள்ளது.

இதே மாதிரி " மண்டபத்தில் திரிந்துகொண்டிருக்கும் பலரை " விட்டு இந்துவிரோத, கலாச்சார விரோத கட்டுரைகளை எழுதிவாங்கி பிரசுரிப்பது இந்து வின் வாடிக்கை . அப்படி ஒன்றுதான் நேற்றைய கட்டுரையும்..

சர அது கிடக்கட்டும் விஷயத்துக்கு வருவோம்..

கட்டுரை என்ன சொல்கிறது.

1.டெல்லி மருத்துவ_மாணவியின் பாலியல் பலாத்காரம கொலைக்கு காரணம் கண்டுபிடிக்க முயன்றுள்ளத. சட்டரீதியாவோ புலனாய்வு ரீதியாகவோ அல்ல. கலாச்சார ரீதியாகவாம.

2.இந்தியாவின் "ஆணாதிக்கம் தான்.." இதற்கு காரணமாம்.

3..போகிற போக்கில் புழுதிவாரி தூற்றும் விதமாக. கட்டுரைக்கு சம்பந்தயில்லாமல்.
விவேகானந்தரின் 150வது ஜெயந்தி ஆண்டில் அவரை அவமானப்படுத்த முயன்றுள்ளது.

முதல் 2 விஷயங்கள் குறித்து நான் கருத்து கூற தயாரில்ல. ஏனெனில் அவை முற்றும் உளரல்கள்..

ஆணும் பெண்ணும் சமம என்று பறை சாற்றும் அமெரிக்க, பிரிட்டன, ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பெண்களின் மீதான பாலியல்வன்முறை இந்தியாவைவிட நான்குமடங்கு அதிகம. பூகோள பரப்பளவ மற்றும் மக்கள் தொகையை கணக்கிட்டால் இந்தியாவை விட 16 மடங்கு அதிகம. இதைப்பற்றி "இந்து" மூச்சு விடவே இல்லையே

ஷரியத் சட்டமான.–.கண்ணுக்கு கண்— கைக்கு கை —- என்று தண்டனையுள்ள அரேபிய நாடுகளின் லட்சணம் என்ன? அங்கு பெண்கள்." .மனிதர்கள அல்ல ஜடம , பொருள்கள்…வெரும் போக வஸ்துக்கள்.". இதைப் பற்றி இவர்க்ளால் எழுதமுடியுமா?

"போலீஸ் 15 நிமிடம் கண்ணை மூடி கொள்ளட்டும, 100 கோடி இந்துக்களையும் வெட்டிசாய்த்து விடுகிறேன்" என்று கொக்கரித்த ஆந்திர முஸ்லீம் எம்எல்ஏ அக்பருதீன் ஓவாசி பற்றி ஒருகட்டுரையோ கண்டனமோ எழுதும் "ஆண்மை " இந்துக்கு உண்டா?

இந்து கலாச்சாரத்தை அவமதிக்கவேண்டும் என்பதற்காகவே "இந்து " இந்த கட்டுரையை இந்த நேரத்தில் வெளியிட்டுள்ளது என்ற சந்தேகம் வழுக்கிறது .

இரண்டாவது ஆண்களை போற்றும் பண்டிகை_ஒன்றை குறிப்பிட்டு இந்தியா ஆணாதிக்க நாடாம அட ஞான சூனியம உன் பெண்டாட்டி நீ நன்றாக இருக்கவேண்டும் என்று தானே அதை கொண்டாடுகிறாள்..

நவ ராத்திரியின் 9 நாளும் நாம் பெண்ணை "சக்தியாக ,காளியாக, மகிஷாசுர மர்த்தினியாக" வணங்குகிறோம. அப்படியென்றால் இது பெண்ணாதிக்க நாட மூளையை "சிகப்பில் தோய்த்து " எழுதினால் இப்படி தான் எழுத்த தோன்றும்..

இங்கு ஆணும் பெண்ணும் சமம் என்கிற "அர்த்த நாரீஸ்வரர் தத்துவம் " அறியாத முழு ஞான சூனியம் " இந்து என்பது இப்போது_புறிகிறதா?

பெண்ணுக்கு பண்டிகைள் கொண்டாடு கிறிர்கள. என்றால் டெல்லி பாலியல் பலத்காரம் நடந்திருக்க கூடாதல்லவா? என்பது இன்னொரு வாதம்.

சாராயம் உள்ளே போனால், மகளிராவத, மண்ணாவத, தூணாவத, துரும்பாவத எல்லாம் ஒண்ணு தான் என்பது அமெரிக்காவில் இருந்த. அமிஞ்சிக் கரை வரையில் நாம் பார்க்கிறோமே. அத ுதான் வெள்ளைக் காரன் கொடுத்துவிட்டுப் போன சரக்கின் மகிம. டெல்லி முதல் உலகெங்கும் இந்த மாதிரி வன்முறைகள் "சரக்கு உள்ளேபோனவுடன் தான் " நடை பெறுகிறது. இதில் ஆணாதிக்கம் எங்கேவந்தத. இது உண்மையில் "ஆல்கஹால் ஆதிக்கம் ".

இறுதியாக "ஆண் தன்மைக்கு " எங்கேயோ தேடிப் பிடித்து ஒருவிவேகானந்தர் படத்தை பிரசுரித்து அதன்கீழ் அவரை அவமதிக்கும் வாக்கியம்வேறு எழுதியுள்ளது "இந்து" இது கண்டிக்கத் தக்கது.

அட மர மண்டை "இந்துவே" அது விவேகானந்தரின் ஒரு பக்தர் சுவாமியை "கம்பீரமான காட்சியாக " வரைந்த ஓவியம. அது விவேகனந்தர் தந்த "போஸ் " அல்ல. அது ஆண் தன்மையின் காட்சி அல்ல. சுய கவுரவத்தின கம்பீரத்தின் சாட்ச உன் ஊனக் கண்ணுக்கு காமாலைக் கண்ணுக்கு மாற்றித் தான் தெரியும்..

அல்லாவும, யேசுவும, ஆண்கள் தான் அல்லவா?. அல்லது . பெண்களா?– அவர் ஸ்தாபித்த மதத்தை கோடிக் கணக்கான ஆண்களும் பெண்களும் வழிபடுகிறார்கள. அது என்ன ஆணாதிக்கமா?அதைபற்றி எழுதினால் உனக்கு என்ன ஆகும் என தெரியும் என்பதால் எழுத வில்லையா? உங்கள் "எடிட்டர்" சித்தார்த் வரத ராசனும, முன்னாள் எடிட்டர , ராமும் என்ன "ஜெண்டர்" சொல்வீர்களா? ஆண்களா? பெண்களா?

"இச்சமூகத்தின் முன்னேற்றம் ஆணும் பெண்ணும் சேர்ந்துமுயன்றாலே சாத்தியப்படும பெண்களை விட்டுவிட்டு இச்சமூகம் எக் காலத்தும் முன்னேற முடியாது.. பறவை ஒருசிறகால் பறப்பது எப்படி முடியாதோ அதுபோல தான் இதுவும்.." என பெண் உயர்வை போற்றியவர் விவேகானந்தர. அவருடைய கருத்துக்கள் முழு வதையும் உலகெங்கும் கொண்டுசென்றவர் சகோதரி நிவேதிதை எனும் பெண்தான்.

இவையெல்லாம் தெரியாமலா ஒருகட்டுரையில் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் விவேகானந்தரின் பெயரைபுகுத்த. படத்தை போட்டுள்ளது "இந்து" அதன் நோக்கம. இதன் மூலம் இந்துகலாச்சாரத்தை அவமதிக்க  வேண்டும் எனபது மட்டுமே..

இது இந்தியாவில் இந்துஇயக்கங்கள் உள்ள வரை நடவாத இன்று முதல் ..இந்துவுக்கு கண்டனங்களை அனுப்பியவண்ணம் இருப்போம். "திருந்தாத ஜென்மம் இருந்தென்ன லாபம்?"

நன்றி; எஸ்.ஆர்.சேகர் பாஜக அகில இந்திய வர்த்தகர் அணி செயலாளர்

Leave a Reply