தனக்கு  தமது மகனே தனது சமூகபணியை  தலைமை ஏற்று வழிநடத்தி செல்வார் என்கிறாரே ? பிறகு தமது மகன் முக. ஸ்டாலின் தனது சமூகபணியை தலைமை ஏற்று வழிநடத்தி செல்வார் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளாரே?

தமிழ் தாமரை டால்க்

மடத்தில்தான் தனக்கு பிறகு யார் என அறிவிப்பார்கள் தி.மு.க என்பது மடம் இல்லை ஒருகோடி மக்கள் உறுப்பினர்களாக இருக்கும் ஜனநாயக மக்கள் இயக்கம் என்று கூறியவருக்கு. இப்போது மடமாக தோன்றிவிட்டதோ என்னவோ தனக்கு பிறகு யார் என்பதை அறிவித்து விட்டார்.

ஜனநாயக இயக்கம்ன்னா குப்பன், சுப்பன்கள் கூட தலைவராகலாம் , ஆனால் இங்கே அரசனே என்றாலும் தலையாட்டிகளாக தான் இருக்க முடியும். அறிஞர் அண்ணா கட்டிக்காத்த ஒரு இயக்கத்தை தனது குடும்ப சொத்தாக்க எம்.ஜி.ஆர்., நெடுஞ்செழியன், வைகோ உள்ளிட்ட எத்தனையோ சீரும் காளைகள் விரட்டப்பட்டன . இப்போது எஞ்சி இருப்பது என்ன என்பது அனைவரும் அறிந்ததே. எனவே அன்று போட்ட திட்டத்துக்கான அறுவடையை இன்று செய்ய போகிறார் அவ்வளவுதான்

தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்

Leave a Reply