செய்தி நிறுவனத்தின்  மீது  வழக்குப் பதிவு; பா.ஜ.க. கண்டனம் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான டெல்லி மாணவியின் நண்பரை பேட்டிகண்டு ஒளிபரப்பிய செய்தி நிறுவனத்தின் மீது டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதை பா.ஜ.க. கண்டித்துள்ளது .

இது குறித்து பா.ஜ.க. மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது , “”செய்தி நிறுவனத்தின் மீது வழக்கு தொடுப்பதன் மூலம் மக்களின் குரலை டெல்லி காவல்துறையால் தடுக்க முடியாது . இது பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதலாகும். உண்மையை தெரிந்துகொள்ள மக்களுக்கு உரிமை உண்டு” என அவர் தெரிவித்தார்

Leave a Reply