ஓ இந்தியா! உன் பெண்மை யின் இலட்சியம் சீதை, சாவித்திரி,தமயந்தி என்பதை_மறவாதே! நீ வணங்கும் கடவுள் துரவிகளுக் கேல்லாம் பெருந் துறவி, அனைத்தையும் தியாகம் செய்து விட்ட உமாபதிசங்கரர் என்பதை மறவாதே! உன்_திருமணம், உன்செல்வம், உன் வாழ்க்கை இவை புலனின் பத்திர்காக அல்ல, உனது தனிப்பட்ட இன்பத்துக்காக அல்ல என்பதை என்பதை மறவாதே!

அன்னையின் பீடத்தில் பலி இடப்படுவதற்கே நீ பிரந்துள்ளாய் என்பதை மறவாதே! உன் சமுதாயம் மகா மாயையான அன்னையின்_நிழல் என்பதை மறவாதே!

தாழ்ந்த ஜாதியினர், அறிவிலிகள் ஏழைகள், படிக்காத வர்கள், சக்கிலி யர்கள், தோட்டிகள், எல்லோரும் உனது ரத்தம், உனது சகோதரர்கள் என்பதை மறவாதே! ஓவீரனே, துணிவுகொள். 'நான் இந்தியன், ஒவ்வோரு இந்தியனும் எனது சகோதரன்' என கர்வத்துடன் சொல்.

'அறிவற்ற இந்தியன், ஏழை இந்தியன், பிராமண_இந்தியன், கீழ்ஜாதி இந்தியன் அனைவரும் எனது சகோதரர்கள்' என சொல்; இடுப்பில் கந்தைமட்டும் கட்டிக் கொண்டு நீயும் உரத்தகுரலில் பெருமையாக கூறு; இந்தியன் எனது சகோதரன், இந்தியன் எனது வாழ்க்கை, இந்தியாவின் தேவதேவியர் எனது தெய்வங்கள். இந்திய சமுதாயம் எனது குழந்தைபருவத்தின் தொட்டில், எனது வாலிப பருவத்தின் இன்ப தோட்டம், எனது முதிய பருவத்தின் வாரணாசி.

சகோதரா சொல் இந்திய மண் தான் எனதுசொர்க்கம். இந்தியாவின் நலன் தான் எனது நலன்.' இரவும் பகலும் திரும்ப திரும்ப பிரார்த்தனை செய்-' ஓ கௌரி மணாளா, 'ஓ உலக நாயகியே, எனக்கு மனித துவத்தை கொடு; அம்மா, என்னுடைய பலவீனத்தை போக்கு; எனது கோழைத் தனத்தை போக்கு! என்னை மனிதனாக்கு.'

Leave a Reply