முதல்வர் பதவியை ராஜினாமா செய்த  அர்ஜூன் முண்டா  ஜார்க்கண்ட்டில் கடந்த 2010-ம் வருடம் நடந்த சட்ட சபை தேர்தலில் பாஜக 18 இடங்களிலும், ஜார்க்கண்ட் முக்திமோர்ச்சா 18 இடங்களிலும் வெற்றிபெற்றறு பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்றது .

இதில் பாஜக.,வை சேர்ந்த அர்ஜூன் முண்டா முதல்-வர் ஆனார்.

சிபுசோரன் மகன் ஹேமந்த்சோரன் துணை முதல்வரானார் . இரு கட்சிகளையும் சேர்ந்தவர்களும் மந்திரிகளாக இடம்பெற்று இருந்தனர்.

இந்நிலையில் வருகிற 10-ந்தேதியுடன் தங்களிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரன் முதல்வர் அர்ஜூன் முண்டாவுக்கு கடிதம் எழுதினார். இதனை அவர் மறுத்துவிட்டார். 28 மாதங்களுக்கு பிறகு ஆட்சியை ஒப்படைப்பது குறித்து எவ்வித ஒப்பந்தமும் செய்யப்படவில்லை என்று மறுப்பும் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து சிபுசோரன் கோபம் அடைந்து .கவர்னர் சையத் அகமதுவை சந்தித்து அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ்பெறும் கடிதத்தை கொடுத்தார். இதனால் பா.ஜனதா ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டது.

இதற்கிடையே முதல்வர் அர்ஜுன் முண்டா இன்று காலை மந்திரிசபை கூட்டத்தை அவசர அவசரமாக கூட்டினார். இதில் சட்ட சபையை கலைக்க கவர்னருக்கு சிபாரிசுசெய்வது என முடிவு எடுக்கப்பட்டது. மந்திரி சபையின் சிபாரிசு பேக்ஸ்மூலம் உடனடியாக கவர்னருக்கு அனுப்பி வைக்கப் பட்டது.அதில் ஜார்க்கண்ட் சட்ட சபையை கலைத்து விட்டு தேர்தல் நடத்த உத்தரவிடவேண்டும் என தெரிவிக்கபபட்டுள்ளது.

இது குறித்து அர்ஜுன் முண்டா கூறுகையில் பாஜக கூட்டணி அரசுக்கு தந்து வந்த ஆதரவை ஜார்க்கண்ட் முக்திமோர்ச்சா வாபஸ்பெற்றது. அடுத்து எந்த தேசிய கட்சியும் ஆட்சியமைக்க வெளிப்படையாக முன் வரவில்லை. அதே நேரம் திரைமறைவில் குதிரைபேரத்தில் ஈடுபடுவதை தடுக்கவே இந்தமுடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இன்று பிற்பகல் அவர் கவர்னரை நேரில் சந்தித்து மந்திரி சபையின் சிபாரிசை கொடுத்தார் . தன் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை சிபுசோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்திமோர்ச்சா கட்சி விலக்கி கொண்டதை தொடர்ந்து , தான் ராஜினாமா செய்வதாகவும் தெரிவித்துள்ளார்

Leave a Reply