கங்கை நதியை பாதுகாப்பது அரசியல் பிரச்சினையல்ல கங்கை நதியை பாதுகாப்பது அரசியல் பிரச்சினையல்ல. அதை பா.ஜ.க., அரசியல் பிரச்சினையாக எழுப்பாது. நதிகளை பாதுகாக்க வேண்டியதன் முக்கிய துவத்தை அனைத்து கட்சிகளும் புரிந்து கொண்டுள்ளன என்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் அத்வானி பேசினார்

கங்கையை சுத்தம் செய்ய முதல் முறையாக திட்டத்தை தொடங்கியவர் ராஜீவ் காந்தி தான். அவர் பிரதமராக இருந்த போது, அளவுக்குமீறி மாசடைந்திருந்த கங்கையை தூய்மை படுத்த கங்கை செயல்திட்டத்தை தொடங்கினார்.

இதே போன்று வெள்ளம் மற்றும் வறட்சிக் கால பாதிப்பை உணர்ந்து நதிகளை இணைக்கவேண்டும் என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வழியுறுத்தினர் . ஆனால், அவரது சிந்தனையை காங்கிரஸ் கண்டுகொள்ள வில்லை .

கங்கை நதியின் மீது நேருவும் மிகுந்த மரியாதை வைத்திருந்தார். தனது இறப்பிற்கு பின் தனது அஸ்தி கங்கையில் கரைக்க வேண்டும் என கூறியிருந்தார். எனவே, நதிகளை சுத்தம்செய்யும் பணியை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று பேசினார்

Leave a Reply