அய்யா வைகுண்டரின் அவதார விழாவில் மாணவர்கள் கலந்துகொள்ள  தேர்வை  மாற்றி அமைக்க வேண்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அவதரித்த அவதாரபுருஷர் ஐயா வைகுண்டர் அவர்களின் ஜெயந்தி விழாவான மாசி 20ம் தேதியை கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கான உள்ளுர் விடுமுறை நாளாக சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு அறிவித்தது.

2012ம் ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் வரையறுக்கப்பட்ட விடுமுறை தினமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 2012-2013ம் ஆண்டுக்கான 102 தேர்வு மார்ச் 1ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது.

அட்டவனையின் படி மார்ச் 1ந் தேதி தமிழ் முதல்தாள், 4ம் தேதி தமிழ் 2ம் தாளும் 6ம் தேதி ஆங்கில முதல்தாளும் 7ம் தேதி ஆங்கில 2ம் தாள் என அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டரின் அவதார தினம் 2013 மார்ச் 4ந் தேதி அமைந்துள்ளது. அன்றைய தினம் மாணவர்களுக்கான தேர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் அய்யா வைகுண்டரின் அவதார விழாவன்று வழிபாடு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அய்யா வைகுண்டரின் அவதார தினமான மார்ச் 4ம் தேதி அன்று நடைபெற உள்ள 102 தேர்வை வேறு நாளுக்கு மாற்றி ஐயாவை வழிபடும் வசதியை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக முதல்வரையும் பள்ளிகல்விதுறையையும் கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply