இந்திய வீரர்களை கொடூரமாக கொன்ற சம்பவம் இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லையைத்_தாண்டி வந்து, இரண்டு இந்திய வீரர்களை கொடூரமாக கொன்ற சம்பவம் இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகும் என்று மாநிலங்களவை எதிர்க் கட்சி தலைவவர் அருண் ஜேட்லி கருத்து தெரிவித்துள்ளார்,

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; இத் தாக்குதலானது, இந்தியாவுக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கையாகும். இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தானைக் கடுமையாக எச்சரிக்க வேண்டும். நடந்த சம்பவம் பற்றிய உண்மைகளை சர்வதேச சமூகத்தின்_முன்பு வைக்கவேண்டும். இதன் மூலம் உலகநாடுகளின் முன் பாகிஸ்தானின் முகம் அம்பலமாகி அது அவமான படுத்தப்படும் என்றார்.

Leave a Reply