முஸ்லீம்கள் உயிரின் மதிப்பு மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுமா? " எல்லோரும் இன்புற்று இருப்பதைத்தவிர வேறொன்றரியேன் பராபரமே—தாயுமானவர்.."
"எல்லோரையும் துன்புறுத்துவதைத் தவிர வேரொன்றரிவேன் பராபரனே"—காங்கிரஸ் கட்சி..

எல்லா உயிர்களும் சமமானது..விலைமதிப்பற்றது என்பதை நாங்கள் முழுமையாக நம்புகிறோம்..

இப்போது விஷயத்துக்கு வருவோம்..

காங்கிரஸ் ஆளும் மராட்டிய மாநிலம் "தூலே " என்னும் ஊரில் 3 நாளைக்கு முன் நடந்த கலவரத்தில், போலீஸ் துப்பாக்கி சூடூ நடத்தியதில், 5 முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள்.70 போலீஸ்காரர்கள் தாக்கப்பட்டு, படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இந்த துப்பாக்கி சூட்டில் பலியான முஸ்லீம்களுக்கு ஆதரவாக எந்த "போலி மதசார்பற்ற கட்சிகளும்' கண்டனமோ இரங்கலோ தெரிவிக்கவில்லை.

காரணம் கொன்றவர்க்ள் காங்கிரஸ்காரர்கள்..காங்கிரசால் முஸ்லீம்கள் கொல்லப்பட்டால்..அது உயிரில்லையா? அதற்கு மதிப்பில்லையா?

ஏன் ..ஒரு இரங்கல்…கண்டனம் கூட இல்லையா?..இதுதான் காங்கிரஸ் ஆட்சியில் முஸ்லீம்கள்.. நிலை..எப்போதும் வெறும் வாயை மெல்லும் கருணாநிதியும், லாலுபிரசாத்தும், பிரகாஷ்கரத்தும், வாய்மூடி மவுனியாய் இருப்பது ஏன்?

போட்டிபோட்டுக்கொண்டு விவாதம் நடத்தும், என்.டி.டி.வி. பர்க்காதத்தும், சி..என்.என்.ஐ.பி.என்…ராஜ்தீப் சர்தேசாயும், ஏன் விவாதம் நடத்தவில்லை?..கொன்றவன் காங்கிரஸ்காரன் என்பதாலோ?

குஜராத்தோ அல்லது பா.ஜ.க ஆளும் மாநிலத்திலேயோ, இம்மாதிரி சம்பவங்கள் நடந்திருந்தால்தான், கொல்லப்பட்டவர்கள் முஸ்லீம்கள் என கருதப்படுவர்களோ?

அங்குதான் அவர்களின் உயிரின் மதிப்பு உயர்ந்ததோ?

அப்போதுதான் கண்டனங்களும், விவாதங்களும், இரங்கல் அறிக்கைகளும் வருமோ?

நான் "தூலே" துப்பாக்கி சூட்டில் பலியான முஸ்லீம்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் வருத்ததையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி; எஸ்.ஆர்.சேகர் பாஜக அகில இந்திய வர்த்தகர் அணி செயலாளர்

Leave a Reply