அறிவை உருவாக்குவதில்  பங்களிப்புசெய்யும் சமுதாயமே எனது கனவு  அறிவுசார் சமுதாயத்தை உருவாக்குவதில் குஜராத் முக்கியபங்கு வகிக்க விரும்புவதாகவும் , இளைஞர்களுக்கு மிகசிறந்த கல்வியை பெறுவதாகவும் அது இருக்க வேண்டும். அறிவை உருவாக்குவதில் ஒவ்வொருவரும் பங்களிப்புசெய்யும் சமுதாயமே எனது கனவாகும் என்று முதல்வர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

ஒரு நிகழ்ச்சியில் இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது; தகவல் தொழில் நுட்ப புரட்சிக்கு பிறகு தகவல்சாதனங்கள் ஒருசிலர் மட்டுமே பயன் படுத்தும் வகையில் இருந்தது. இபபோது தகவல் தொழில் நுட்பமும், சாதனங்களும் பரவலாக்கப்பட்டுள்ளன. இந்த தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவோர் அதன் வளர்ச்சிக்கும், உதவுபவர்களாக இருக்கின்றனர் . இந்த தொழில் நுட்பத்துக்கு யாரும் தனி உரிமை கோரமுடியாத வகையில் அனைவரும் இணைந்து இதை உருவாக்கிவருகின்றனர்.

இந்த தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி முழுமை அடைந்தால் நமது சமுதாயம் அறிவுசார் சமுதாயமாகமாறும். ஒவ்வொரு தனிமனிதனும் பயனடையும் வகையில் தொழில் நுட்பமும் வளரும். மாற்றங்கள் நிகழும் காலக் கட்டத்தில் நாம் இருக்கிறோம். இந்த மாற்றங்களில் குஜராத் உலக சமுதாயத்தோடு முக்கியபங்காற்ற விரும்புகிறது. அறிவை உருவாக்குவதில் ஒவ்வொருவரும் பங்களிப்புசெய்யும் சமுதாயமே எனது கனவாகும். இளைஞர்களுக்கு மிகசிறந்த கல்வியை பெறுவதாகவும் அது இருக்க வேண்டும். குஜராத் மாநிலத்தில் உயர்கல்வி என்றால் வெறும் சான்றிதழ்களை மட்டும் விநியோகிப்பதில்லை. வேலை வாய்ப்பு, தொழில் திறன்களை கற்றுத்தரும் படிப்புகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்றார்.

Leave a Reply