உ.பி.,யில் நாடாளுமன்றத் தேர்தலின் போது பா.ஜ.க தனித்து போட்டியிடும் உ.பி.,யில் நாடாளுமன்றத் தேர்தலின் போது பா.ஜ.க தனித்து போட்டியிடும் என்று அம்மாநில பா.ஜ.க தலைவர் லட்சுமி காந்த் பாஜ்பாய் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்:.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; அடுத்த நாடாளுமன்ற

தேர்தலின் போது, உ.பி.,யில் எந்த கட்சியுடனும் பாஜக கூட்டணி வைக்காது. நாங்கள் யாரையும்காட்டி தேர்தலை எதிர்கொள்ள தயாரில்லை.

டெல்லியில் கற்பழிக்கப்பட்ட மாணவி சிங்கப்பூர் மருத்துவ மனையில் இறந்த போது, முதல்வர் அகிலேஷ்யாதவ் தனது குடும்பத்தினருடன் சாய் பாய் மகோத் சவத்தில் பங்கேற்று மகிழ்ந்தார். ஆனால் இப்போது அந்தமாணவி சாவுக்கு வருத்தம்தெரிவிக்கிறார். டெல்லி சம்பவத்திற்கு பிறகு உபி.யில் 75 பாலியல் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இது அரசின் உணர்வற்ற தன்மையை காட்டுகிறது.

எல்லையில் பாகிஸ்தான் இராணுவத்தால் கொல்லப்பட்ட வீரர் ஹேம்ராஜின் உடல் தகனம் செய்யப்பட்ட போது மாநிலத்திலிருந்து அதிகாரிகள், அமைச்சர்கள் ஒருவரும் பங்கேற்கவில்லை. இது அரசின் உணர்வற்றதன்மைக்கு மற்றும் ஒரு உதாரணம். என்று தெரிவித்தார்

Leave a Reply