இந்தியா வேடிக்கைபார்க்காது ; பிக்ரம்சிங் இந்திய நிலைகளின் மீது பாகிஸ்தான் ராணுவம் இனியும் ஒரு தாக்குதலை நடத்தினால் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டோம் என்று இந்திய ராணுவ தளபதி பிக்ரம்சிங் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜம்மு – காஷ்மீரில் இருக்கும் எல்லைப்பகுதியில், கடந்த வாரம் அத்து மீறி நுழைந்த, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், இந்திய ராணுவ_வீரர்கள் இருவரை, கொடூரமாகக் கொன்றதையடுத்து, எல்லையில் அசாதாரணமான சூழல் நிலவுகிறது.

டில்லியில் நிருபர்களை சந்தித்த ராணுவ தளபதி பிக்ரம் சிங், இந்திய_வீரர்கள் கொல்லப்பட்டு ஒருவரின் தலை துண்டிக்க பட்ட சம்பவம் கொடூரமானது , மன்னிக்க முடியாதது . மேலும், இந்த தாக்குதல் முன் கூட்டியே திட்டமிட்டசெயல் என்றும், தக்க இடம் மற்றும் நேரத்தில் இதற்கு பதிலடிகொடுக்க இந்தியாவுக்கு உரிமை உண்டு . மேலும் ஒருமுறை இதுபோன்ற தாக்குதல் நடத்தப்பட்டால் அதை இந்தியா வேடிக்கைபார்க்காது என்று பிக்ரம்சிங் கடும் எச்சரிக்கை விடுத்தார்.

Leave a Reply