காவிரி நதி நீர் பிரச்னையில் தமிழக அரசின்  அனைத்து நடவடிக்கை களையும் பாஜக  ஆதரிக்கும் காவிரி நதி நீர் பிரச்னையில் நமது உரிமைகளை இழக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த விஷயத்தில் பிரதமர் நேரடியாக தலையிட வேண்டும். இந்தவிஷயத்தில் தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கை களையும் பாஜக ஆதரிக்கும். காவிரி விஷயத்தில் தமிழக அரசு அனைத்துகட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என்று தமிழக பா.ஜ தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டு கொண்டுள்ளார்.

இது குறித்து நேற்று நாகர்கோவிலில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் மூடப்படும் என்ற அரசின் ஆணை வரவேற்கத்தக்கது. காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் இராணுவத்தை சேர்ந்தவர்கள் இந்திய ராணுவத்தினரை சுட்டுக்கொன்றதோடு மட்டுமில்லாமல் தற்போது கழுத்தை அறுத்து தலையை எடுத்துசென்றுள்ளனர்.

ஒரு பல வீனமான பிரதமர் இருப்பதனால் தான் இதுபோன்று நடக்கிறது. பிரதமரையோ அல்லது காங்கிரசையோ நான் குறை_கூறவில்லை. இந்த விஷயத்தில் இந்தியா துணிச்சலான நடவடிக்கையை எடுக்கவேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட பா.ஜ.க சார்பில் வரும் 16 ந் தேதி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம்_முன்பு காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply