ராணுவ வீரர்களின்  படுகொலையில் பிரதமர் மெளனம் காத்து வருகிறார்  ராணுவ வீரர்களின் படுகொலையில் பிரதமர் மன்மோகன்சிங் மெளனம் காத்து வருவதாக பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி குற்றம் சுமத்தியுள்ளார்.

இதுகுறித்து, டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா

மூத்த தலைவர் அருண் ஜேட்லி கூறியதாவது:

பாகிஸ்தானுடன் இந்தியா நட்புக் கரம் நீட்டுகிறது. அந்த நாட்டுக்கு எதிராக கடுமையான கருத்து தெரிவிப்பதை தவிர்த்துவருகிறது. இந்த நிலையில், காஷ்மீர் எல்லையில் நுழைந்த பாகிஸ்தான் வீரர்கள் இரண்டு இந்திய வீரர்களை கொடூரமாக கொன்று ள்ளனர். அவர்களில் ஒருவரது தலையை துண்டித்து எடுத்துச்சென்றுள்ளனர். இதுவரை இந்தியாவுக்கு இது போன்ற அவமரியாதை ஏற்பட்டதில்லை.

இந்தசம்பவம் நிகழ்ந்து 6 நாள்கள் ஆகிவிட்ட நிலையில், ஜனநாயக நாட்டில் உயரியபொறுப்பில் இருக்கும் பிரதமர் மன்மோகன்சிங் இதுதொடர்பாக இதுவரை எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடவில்லை.

இந்தசம்பவம் தொடர்பான அரசின் அறிக்கை தெளிவாக இல்லை. பாகிஸ்தானுடனான உறவு இனி எப்படி இருக்கும்? அந்த நாட்டுடனான அமைதி பேச்சுவார்த்தை தொடருமா? இத்தகைய கேள்விகளுக்கு அரசின் பதில் என்னவாகஇருக்கும் என்பது தெரியவில்லை என்றார்.

Leave a Reply