காற்றாடி திருவிழாவை உலக அளவில் பிரபலப்படுத்தி உலகையே ஈர்த்தேன் குஜராத்தில் ஒரு சம்பராதயமாக நடந்துவந்த காற்றாடி திருவிழாவை உலக அளவில் பிரபலப்படுத்தி உலகையே ஈர்த்தேன் என்று முதல்வர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

25வது சர்வதேச காற்றாடி_திருவிழா குஜராத்தின் அகமதாபாத் நகரில்

சபர்மதிநதி கரையில் நேற்று தொடங்கியது. இதை குஜராத் முதல்வர் நரேந்திரமோடி தொடங்கி வைத்து பேசியதாவது:

பல ஆண்டுகளாக காற்றாடி திருவிழா குஜராத்தில் நடந்து வருகிறது. இதை ஒருசம்பிரதாய விழாவாக நடத்தி வந்தார்கள். இந்த திருவிழாவுக்கு சர்வதேச அந்தஸ்ததை பெற்றுத்தந்தது நான் தான். அதை பிரபலபடுத்தி, உலகெங்கும் இருந்து சுற்றுலா_பயணிகளை வரவழைத்துள்ளேன். காற்றாடியை_காட்டி உலகையே ஈர்க்கமுடியும் என்பதை நிரூபித்துள்ளேன்.

இந்த வருடம் காற்றாடி திருவிழாவை சிறு நகரங்களிலும் நடத்த ஏற்பாடு செய்ய பட்டுள்ளது. இதன்மூலம் குஜராத்தில் சுற்றுலாதுறை வளர்ச்சியடையும். சுற்றுலா துறையை கடந்த ஆட்சிகள் புறக்கணித்தன. ஆனால், நாங்கள் தனிகவனம் செலுத்தினோம். இதனால், இந்திய சராசரியான 7 சதவீதத்தைவிட அதிகமாக 16 சதவீத வளர்ச்சியை குஜராத் சுற்றுலாதுறை அடைந்துள்ளது. சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தால் பரம ஏழைகள்கூட பலனடைவார்கள் என்று நரேந்திர மோடி பேசினார்

Leave a Reply