ஒவ்வொரு இந்திய வீரரின் உயிரும் விலைமதிப்பற்றவை இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் 2 இந்திய வீரர்கள் பாகிஸ்தானின் காட்டுமிராண்டி படையினரால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களில் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டிருக்கிறது. இச்சம்பவம் நாடு முழுக்க பலத்த அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது. பல்வேறு தரப்பு மக்களும்

இக்கொடுஞ்செயலை வன்மையாகக் கண்டித்திருக்கின்றனர்; பாகிஸ்தானுக்கு கடுமையான எச்சரிக்கைகளும் விடப்பட்டிருக்கின்றன. ஆனால், இதுபோன்ற கண்டனங்களாலும் எச்சரிக்கைகளாலும் எவ்விதப் பயனும் விளையப் போவதில்லை.

கடந்த பல ஆண்டுகளாகவே பாகிஸ்தானுடன் நல்லுறவு நிலவ வேண்டும் என்பதற்காக இந்திய அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகளில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டதும் கூட இருதரப்பிலும் சுமூக உறவு மேம்பட வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், இந்தியாவின் இத்தகைய நல்லுறவு நடவடிக்கைகளை பாகிஸ்தான் மதிப்பதேயில்லை.இந்த முறை மட்டுமல்ல இதற்கு முன்பும் பல தடவைகளிலும் இந்தியாவின் சமரச முயற்சிகளுக்குப் பதிலாக பாகிஸ்தான் நாட்டுக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்வதையும், எல்லையில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் தொடுப்பதையுமே பதில் நடவடிக்கைகளாக மேற்கொண்டு வருகிறது.

எனவே பாகிஸ்தானுக்கு எதிராக தக்க பதிலடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது கட்டாயமாகிறது. இந்திய வீரர்களில் ஒருவர் கொல்லப்பட்டாலும் குறைந்தது 10 பாகிஸ்தான் படையினராவது கொல்லப்பட வேண்டும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கட்டும் மறுபுறம் வரம்பு மீறும் காட்டுமிராண்டி பாகிஸ்தான் படையினர்களையும் எல்லைக்குள் ஊடுருவ முயலும் பாகிஸ்தானிய பயங்கரவாதிகளையும் நீதி, நியாயம்,கருணை எதுவும் பார்க்காமல் இந்திய இராணுவத்தினர் கொன்ற் ஒழிக்க தகுந்த உத்தரவுகள் இடப்பட வேண்டும் இப்போது கூட தலை துண்டிக்கப்பட்ட இந்திய வீரர்க்கு பதிலடியாக எத்தனை முடியுமோ அத்தனை பாகிஸ்தான் படையினரை கொல்ல உத்தரவிட வேண்டும்.

ஒவ்வொரு இந்திய வீரரின் உயிரும் விலைமதிப்பற்றவை. பாகிஸ்தானுடன் நல்லுறவு தேவைதான். ஆனால், அது ஒருதரப்பாயிருக்க முடியாது. பாகிஸ்தானோடு அமைதி நீடிக்க வேண்டும் என்பதற்காக நமது வீரர்கள் பலியாவதற்கு ஒருக்காலும் அனுமதிக்கக் கூடாது. பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் பகட்ட வேண்டியது உடனடி அவசியம்.

நன்றி ; கு.காந்தி ராஜா

Leave a Reply