பாகிஸ்தான் ராணுவத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது இந்திய இராணுவ வீரர்களை கொடூரமாக படுகொலைசெய்த பாகிஸ்தான் ராணுவத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதாக பா.ஜ.க , அகில இந்திய செய்தி தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கருத்து தெரிவித்துள்ளார்.

அருமனையில் நடக்கும் 9 வது பொங்கல்_விழாவில் கலந்துகொள்ள வந்த பா.ஜ.க, அகில இந்திய செய்தித் தொடர்பாளர் ராஜிவ்பிரதாப் ரூடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தின் முக்கிய விழாக்களில் பொங்கல்_விழாவும் ஒன்று. பொங்கல் என்பது அறுவடை விழாவாகும். இந்த விழா தமிழகத்தில் பொங்கல் என்றும், ஹிமாச்சல் பிரதேசம் போன்ற மாநிலங்களில் மகரசங்கராந்தி என்றும், ம.பி., குஜராத், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கும்பமேளா என்றும் கொண்டாடப்படுகிறது.

தற்போது நாடு மிகவும் மோசமான நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு. கூட்டணி அரசு அனைத்திலும் தோல்வி அடைந்து வருகிறது. உலகின் 3வது வலிமையான ராணுவத்தை இந்தியா கொண்டுள்ளது.

அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து இந்தியா 3வது இடத்தில் உள்ளது. கடந்தவாரம் 2 இந்திய ராணுவ வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் மிகக் கொடூரமான முறையில் கொலைசெய்தது. இதற்கு உடனடியாக பதிலடி வழங்காமல் இந்திய அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. இது வன்மையாக கண்டிக்க தக்கது ராஜிவ் பிரதாப் ரூடி கூறினார்.

Leave a Reply