நரேந்திர மோடிக்கு தமிழக பா.ஜ.க  சார்பில் விமானநிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற வடமாநில தொழிலதிபர் இல்ல திருமண_விழாவில் கலந்து கொள்வதற்க்காக .இன்று சென்னை வந்தார்

தனி விமானத்தில் சென்னை நரேந்திர மோடிக்கு தமிழக பா.ஜ.க சார்பில் விமானநிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது .

இதற்காக பழைய விமானநிலைய வளாகத்தில் சிறியமேடை அமைக்கப்பட்டது. மேடையில் நின்றபடி கட்சியினரின் வரவேற்பை ஏற்றுக் கொண்டார் . மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் இல.கணேசன், அமைப்பு செயலாளர் மோகன் ராஜுலு, மாநில துணை தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், செயலாளர் வானதி ஸ்ரீனி வாசன் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் .

வரவேற்புநிகழ்ச்சி முடிந்ததும் நுங்கம்பாக்கம் தாஜ் ஓட்டல் சென்றார் . அங்கு சிறிதுநேரம் ஓய்வெடுத்த நரேந்திர மோடி பிறகு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் .

Leave a Reply