வரும் பார்லி தேர்தலில் குமரியில் இழந்த செல்வாக்கை மீண்டும் நிலைநாட்ட தற்போதே பா.ஜ., வினர் தங்களை தயார் படுத்தி வருகின்றனர். அதற்கான வியூகம் அமைத்து தேர்தல் களத்தை சந்திக்கும் முயற்சியில் வார்டு, கிளை, ஒன்றிய, நகர, மாவட்ட அளவில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் இரண்டாவது தடவையாக முன்னாள் மத்திய அமைச்சரான பொன். ராதாகிருஷ்ணன் தலைமை பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவர் வரும் காலத்தில் தமிழகத்தில் பா.ஜ., வை முன்னிலை படுத்த வேண்டும் என்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இதற்கான பணிகளை அவர் முடுக்கி விட்டு வருகிறார். இதனையடுத்து அவர் தமிழகம் முழுவதும் கட்சியை பலப்படுத்தும் வகையில் பணிகளை முடுக்கி விட்டு வருகிறார். சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பகுதியில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை நேரில் சந்தித்து பல்வேறு வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் வரும் பார்லி., தேர்தலை கருத்தில் கொண்டு, பா.ஜ., வை முன்னிலை படுத்தும் வகையில், தற்போதே பணிகளில் ஈடுபட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் பா.ஜ.,வினர் தற்போது தேர்தல் களத்தை மையமாக வைத்து தங்களது பணியினை செயல்படுத்தும் விதமாக களத்தில் இறங்கியுள்ளனர்.

அதன் அடிப்படையில் குமரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கிளை, ஒன்றிய, நகர, மாவட்ட அளவிலான பதவிகளில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில் முதற்கட்டமாக அந்தந்த பேரூர், நகர, ஒன்றிய, மாவட்ட அளவில், அந்தந்த பகுதி மக்களின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு அரசு அவர்களுக்கு நியாயமான கோரிக்கைகளை செய்து கொடுக்க ஆர்ப்பாட்டம், போராட்டம், மறியல் போராட்டம் எனவும் நடத்தப்பட்டு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் திராவிட கட்சிகள் போன்று கிளை தலைவருக்கு அதிக அதிகாரம் கொடுக்க வேண்டும் அதன் அடிப்படையில் தான் கட்சியை வலுசேர்க்க முடியும். கிளை நிர்வாகிகள் பங்கு அதிகம் இருக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் எனவும், எந்த ஒரு விஷயமும் கிளை நிர்வாகிகளுக்கு தெரிந்து செயல்படுத்தப்பட வேண்டும் எனவும், அதன் அடிப்படையில் கிளை தலைவர்களுக்கு பாராட்டு விழா நடத்த பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்போதைய சூழ்நிலையில் கடந்த தேர்தலில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்ட நிலையில், வரும் பார்லிதேர்தலை கருத்தில் கொண்டு, மாநில தலைவராக பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், தற்போது பா.ஜ., ஓட்டபந்தயத்திற்கு தயாராகி வருகிறது.

வரும் தேர்தலுக்கு ஓரிரு மாதங்கள் உள்ள நிலையில், தற்போதே தேர்தல் தயாரிப்புகள் துவக்கி வருகிறது. பா.ஜ., தலைவரின் சொல்லிலும், செயலிலும் வெளிப்படும் நம்பிக்கை தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை பா.ஜ., விற்கு பெரிய வெற்றி என்பது இலக்கு அல்ல என்றாலும், தனி முத்திரை பதிக்கவேண்டும் என்ற கருத்திலும், ஒரு சில தொகுதிகளிலாவது முத்திரை பதிக்க வேண்டும் என்பதே எண்ணமாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியில், பல்வேறு கருத்துக்கள் பரிமாற பட்டது. அதில் முக்கிய கருத்தாக, கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை பா.ஜ., கடந்த லோக்சபா தேர்தலில் அதிக ஒட்டுக்கள் பெற்ற தொகுதியில், மேலும் கட்சியை வலுசேர்க்கும் விதமாகவும், தங்கள் முத்திரையை பதிக்க வேண்டும் எனவும், மேலும் முக்கிய கட்சிகளின் வரிசையில் நாமும் இடம் பிடிக்க வேண்டும் என்ற கருத்திலும், நம்மால் வெற்றி பெற முடியும் என்ற கருத்தோடு, தங்கள் பணியை துவக்க வேண்டும் என்ற லட்சிய கனவுடன் பணிகளை துவக்க வேண்டும் எனவும் எடுத்து கூறப்பட்டது. இதன் அடிப்படையில், தற்போதைய சூழ்நிலையில் மக்களின் அன்றாடப்பிரச்னையான அத்தியாவசிய யொருட்களின் விலையேற்றத்தை கையில் எடுத்து கொண்டுள்ளது.

விலைவாசி உயர்வை பொறுத்தவரையில், இந்த விஷயத்தில் அரசுகள் மூழ்கி கொண்டு இருக்கும் போது, அரசுக்கு எதிரான போரை கையில் எடுத்து கொண்டு, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், தனது காயை நகர்த்தி வருகிறது. தற்போது இந்த பிரச்னை மாவட்டத்தில் பேசப்படும் அளவிற்கு, அனைத்து பகுதிகளிலும் இதற்கு ஆதரவு கிடைக்கும் அளவிற்கு தங்களை தயார் படுத்தி வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் மக்களை திரும்பி பார்க்கும் வகையில் தனது பணியை செய்ய தொண்டர்கள் தயாராகி வருகின்றனர். குமரியில் இழந்த செல்வாக்கை மீட்டு, செல்வாக்கை நிலைநாட்டும் வகையில் தங்களது களத்தை தயார்படுத்திவருகிறது.

நன்றி தினமலர்

Tags:

Leave a Reply