ராகுல் தலைவராக ஆனால் கூட, அவரை பா.ஜ.க.,வுக்கு போட்டியாக கருதமுடியாது காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்திக்கு துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டிருந்தாலும் , அவரை போட்டியாக கருதமுடியாது என்று பாஜக செய்தித்தொடர்பாளர் ஷநவாஸ் ஹுசைன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது; காங்கிரஸ் கட்சியில் ராகுல்காந்திக்கு இரண்டாம் இடம் வழங்கப்பட்டிருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. அவர் ஏற்கெனவே சோனியாவுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில்தான் இருந்துவருகிறார். நேரு-காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்களால் மட்டுமே இந்த இடத்துக்கு வரமுடியும்.

ராகுல் காந்தி தலைவராக நியமிக்கப்பட்டால்கூட, அவரை பா.ஜ.க.,வுக்கு போட்டியாகக் கருதமுடியாது. காங்கிரஸ் கட்சிக்கு எதிர் காலமே இல்லை என்று தெரிவித்தார்

Leave a Reply