கல்யாண் சிங் மீண்டும் பா.ஜனதாவிற்கு திரும்பினார் உ.பி., முன்னாள் முதல்வரும், பாஜக.,விலிருந்து விலகி ஜன்கிராந்தி என்ற தனி கட்சியை கண்டவருமான கல்யாண் சிங் மீண்டும் பா.ஜனதாவிற்கு திரும்பியிருக்கிறார்.

லக்னோவில் நடைபெற்ற பிரமாண்ட பேரணியில், தனது ஜன்கிராந்தி

(ராஷ்டிரவாடி) கட்சியை பாஜக.,வுடன் இணைத்தார். இந்த பேரணியில் பாஜக., தேசிய தலைவர் நிதின்கட்காரி, ராஜ்நாத்சிங், உமா பாரதி, முக்தார் அப்பாஸ் நக்வி, கல்ராஜ் மிஸ்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரசியல் ஆதாயத்துக்காக முஸ்லிம்களை கவரும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டு வருகின்றது. பாஜக முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி அல்ல. அனைவருக்கும் நீதி கிடைக்கவேண்டும் எனும் கொள்கையையே விரும்புகிறது’

பா.ஜ.க மற்றும் ஆர்எஸ்எஸ். குறித்த சர்ச்சைக்குரிய கருத்துதெரிவித்த மத்திய மந்திரியின் பேச்சு கண்டனத்துக்குரியது , இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கல்யாண் சிங் வலியுறுத்தினார்.

Leave a Reply