“நாட்டில் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகும் விலைவாசியை கட்டுப்படுத்த முடியாத பிரதமர், காங்கிரஸ் அரசு பதவி விலகவேண்டும், காங்கிரஸ் கட்சியினர் தைரியமின்றி கோழைத் தனமாக அரசியல் நடத்துகின்றனர் ” என்று பா.ஜ.க , மாநிலத்தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று தஞ்சையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சமீபத்தில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய கூட்டத்தில், ஆர்எஸ்எஸ்., அமைப்புகுறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். பயங்கரவாதசக்தி என்று கூறியுள்ளனர். உண்மையில் வேறுஅமைப்புகள், இயக்கங்களை குறித்து இப்படி கூறினால், தலை தனியே போயிருக்கும். ஆனால், ஆர்எஸ்எஸ்., அமைப்பு பற்றி எப்படி வேண்டுமானாலும் கருத்துகூறலாம் என்று , நினைக்கின்றனர். இது கண்டிக்கத்தக்கது.

வரும் லோக்சபாதேர்தலில், பா.ஜ.க , தனித்து போட்டியிடுமா?, கூட்டணியில் தேர்தலை_சந்திக்குமா? என்பது, அப்போதைய சூழலைபொறுத்தது. இது, கூட்டணி காலம். அதனால் இப்போது ஏதும் கூறமுடியாது. நாட்டில் நாளுக்குநாள் நிலவி வரும் விலைவாசி உயர்வை தீர்க்க முடியவில்லை என்று கூறினால், பிரதமர் பதவி விலகவேண்டும்.

காங்கிரஸ் கட்சி பதவியை விட்டு விலகிவிட வேண்டும். விலைவாசியை கட்டுப்படுத்த முடியாத போது, பதவியில் நீடிக்க அருகதையில்லை. காங்கிரஸ் கட்சியினர் தைரியமின்றி கோழைத் தனமாக அரசியல் நடத்துகின்றனர் என்று அவர் கூறினார்.

Leave a Reply