சுஷீல்குமார் ஷிண்டேவின் கருத்து  தவறானது ; தேசியவாத காங்கிரஸ்  ஹிந்து பயங்கரவாதத்துடன் பாஜக, ஆர்எஸ்எஸ. அமைப்பு போன்றவற்றை தொடர்புபடுத்தி மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே கூறியகருத்து தவறானது என தேசியவாத காங்கிரஸ் பொதுச்செயலாளர் டி.பி. திரிபாதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:÷ இதை போன்ற வார்த்தைகளை சுஷீல்குமார் ஷிண்டே பயன்படுத்தியது தவறானது மட்டுமல்ல; சரியானதும அல்ல. பயங்கரவாதத்துடன் ஒருமதத்தையோ, சமூகத்தையோ தொடர்புபடுத்திப் பேசுவதிலிருந்து அமைச்சர்கள் விலகியிருக்கவேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு” என்றார் டி.பி. திரிபாதி.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இருந்தபோதும் , மத்திய உள்துறை அமைச்சரை அந்த கட்சி கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply