பா. ஜனதா தலைவராக ராஜ்நாத்சிங் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு  குஜராத் மாநில முதல்வர்  நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். ராஜ்நாத்சிங் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது கட்சிக்கு நன்மைதரும் என மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

உபி., மாநில முன்னாள் முதல்வர் ராஜ்நாத்சிங் அகில இந்திய தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இதை குஜராத் மாநில பாஜக.முதல்வர் நரேந்திரமோடி வரவேற்றுள்ளார். விவசாயிகளுக்கும் ராஜ்நாத் சிங்கிற்கும் இடையே நல்லதொடர்பு இருக்கிறது. அவருக்கு இருக்கும் அரசியல் அனுபவமானது மீண்டும் தலைமைபொறுப்பை கொடுத்துள்ளது என டிவிட்டரில் மோடி கூறியுள்ளார்.

 மத்தியில் வாஜ்பாய் தலைமையில் தே.ஜ.,கூட்டணி அரசு இருந்தபோது விவசாய துறை  அமைச்சராக ராஜ்நாத்சிங் பணியாற்றினார். விவசாயிகளுடன் அவர் எப்போதும் தொடர்புவைத்துள்ளார். இதன் மூலம் பாஜக.,வுக்கு பயன் ஏற்படும் என 2வது டிவிட்டரில் கூறியுள்ளார்.

பாஜக பார்லிமெண்டரி கட்சி கூட்டத்தில் தலைவர் பதவியின் போது சிறப்பாக பணியாற்றியதற்கு பாராட்டுதெரிவித்து தீர்மானம் ஒன்றை கட்சியின் மூத்த தலைவர் எல்கே. அத்வானி கொண்டுவந்தார் என பொதுச் செயலாளர் ஆனந்த்குமார் தெரிவித்தார்.

இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப் பட்டதாகவும் குமார் தெரிவித்தார்.  என் மீது குற்றச் சாட்டு எழுந்துள்ளதால் கட்சியை அது பாதிக்கும் என்பதால் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளேன். மேலும் என் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவைகள் என்பதை நிரூபிப்பேன் என நிதீன் கட்காரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply