ஷிண்டேவின் கருத்துக்கு எதிராக பாஜக  நாடு தழுவிய ஆர்ப்பாட்டம இந்து தீவிரவாதம்’ பற்றி மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவின் கருத்துக்கு எதிர்ப்புதெரிவித்து பாஜக நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது. இந்துக்களின் மனதை புண் படுத்தியுள்ள ஷிண்டே மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று பாஜக., வலியுறுத்தியுள்ளது.

பா.ஜ.க தலைவராக ராஜ்நாத்சிங் நேற்று பொறுப்பேற்று கொண்டதும், ஷிண்டே கருத்துக்கு எதிராக நாளை பா.ஜ.க ஆர்ப்பாட்டத்தை நடத்தும் என முதல் அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி, இன்று ஜந்தர்மந்தரில் கூடிய ஏராளமான பா.ஜ.க.,வினர், ஷிண்டே கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதே போன்று நாட்டின் அனைத்து பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

Leave a Reply