சுஷில் குமார் ஷிண்டே பதவி விலகவேண்டும்; ராஜ்நாத் சிங்  இந்து பயங்கரவாதம் என்று பேசி சர்ச்சையில் சிக்கியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே பதவி விலகவேண்டும். பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் அப்படியும் இல்லை என்றால் பார்லிமென்ட்டில் பிரச்னையை கிளப்புவோம் என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார்.

தீவிரவாத முகாம்களை, பா.ஜ., மற்றும் ஆர்எஸ்எஸ்., அமைப்புகள் நடத்துகின்றன. என்று உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே உண்மைக்கு புறம்பாக பேசியிருந்தார். இதனால், கோபம் கொண்ட பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்புகள், இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ. தேசிய தலைவர் ராஜ்நாத் சிங், மத்திய அரசு ஷிண்டேயை பதவி நீக்கம் செய்யவேண்டும். இல்லை எனில் ,பிரதமர், சோனியா, ஷிண்டோ, ஆகியோர் பகிரங்கமன்னிப்பு கேட்கவேண்டும். அப்படியும் இல்லை என்றால் நடக்க உள்ள பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்த தொடரின் போது ஷிண்டோ விவகாரம்குறித்து பிரச்னையை கிளப்புவோம்.. அங்கும் மத்தியஅரசு தனது வருத்தத்தினை அறிக்கையாக வெளியிடவேண்டும். என்று ராஜ்நாத்சிங் கூறினார்.

Leave a Reply