திரிபுரா சட்டப் பேரவை தேர்தலில் பா.ஜ.க  தனித்து போட்டி பிப்ரவரி 14ஆம் தேதி திரிபுராவில் நடைபெறவுள்ள சட்டப் பேரவை தேர்தலில் தனித்து போட்டியிடுவது என பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளது.

இது குறித்து கட்சியின் மாநிலத்தலைவர் சுதீந்திர தாஸ் குப்தா,

நிருபர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட மாநிலத்தைச்சேர்ந்த ஐக்கிய ஜனதா தளம், கண மஞ்சா போன்ற கட்சிகள் விருப்பம்தெரிவித்தன. ஆனால் எந்த கட்சியுடனும் பா.ஜ.க கூட்டணி வைக்காது. எந்தப் பகுதிகளில் பா.ஜ.க வலுவாக உள்ளதோ, அந்த பகுதிகளில் மட்டும் பா.ஜ.க தனது வேட்பாளர்களை நிறுத்தி தனது பலத்தை நிருபிக்கும் என்றார்.

Leave a Reply