தனது நற்பெயரை கெடுக்க அரசியல்சதி; நிதின் கட்கரி தனது நற்பெயரை கெடுக்க அரசியல்சதி நடைபெறுவதாக நிதின் கட்கரி குற்றம் சாட்டியுள்ளார் .

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது பாஜக தேசிய தலைவர் தேர்தலில் இரண்டாம முறையாக நான் போட்டியிடுவதை

விரும்பாதவர்கள் , எனக்கு தொடர்பில்லாத சம்பவத்தில் என்னைத்தொடர்புபடுத்தி குற்றம் சுமத்தி உள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை. எனது நற்பெயரை கெடுப்பதன் மூலம், பாஜக.,வுக்கு களங்கம்கற்பிக்க கூட்டு சதி நடைபெறுகிறது.

எனினும், கட்சியின் நலன்கருதி, தலைவர் பதவிக்கு ராஜ்நாத்சிங் பெயரை முன்மொழிகிறேன். இதுவரை எனக்கு ஒத்துழைப்புதந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் _கொள்கிறேன் என்றார்.

Leave a Reply