விஸ்வரூபம் படத்தை தடை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது ”இஸ்லாமிய சமூகத்தை பாதித்திருப்பதாககூறி விஸ்வரூபம் படத்தை தடை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது” எ‌ன பாஜக. மூத்த தலைவர் இல.கணேசன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; சமீபத்தில்

அமெரிக்காவில் வெளியிடப்பட்ட ஒரு குறும்படத்துக்கு எதிர்ப்பதெரிவித்து சென்னையில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தை தாக்க முயற்ச நடந்தது.

சமீபத்தில் வெளிவந்த துப்பாக்கி படம் இஸ்லாமிய சமுதாயத்தை பாதிக்கிறது என சொல்லி திரை அரங்குகள் தாக்கப்பட்டது . இதை தொடர்ந்து இதில் தமிழக முதல்வர் தலையிட்டு படத்தின் சிலபகுதிகள் நீக்கப்பட்டன

தற்போது விஸ்வரூபம இஸ்லாமிய சமூகத்தை பாதித்திருப்பதாக கூறி படத்துக்கு தடைவிதித்திருப்பது கண்டிக்கத்தக்கது எ‌ன்று இல.கணேச‌ன் தெ‌ரி‌வி‌‌த்தா‌ர்

Leave a Reply