நாட்டில் அறநெறிகளை காப்பது அவசியம் நாட்டில் அறநெறிகளைகாப்பது அவசியம். இதில் எந்த சமரசங்களுக்கும் இடம்மில்லை என, பாஜக மூத்த தலைவர் எல்கே.அத்வானி குறிப்பிட்டுள்ளார்.

குடியரசு தின விழாவை முன்னிட்டு தனதுவீட்டில் தேசியக் கொடி ஏற்றி. பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:

மக்களின் அறிவுத் திறனையும், உணர்வு பூர்வ நெறிகளையும் மேம்படுத்துவதுடன், மக்களின் ஆன்மிகபற்றையும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆன்மிக நெறிமுறைகள் மக்களை நல்வழிப்படுத்தும்.

சமீபத்தில் தில்லியில் நடந்த சம்பவம் மிகப்பெரிய வேதனையைதந்தது. பொது வாழ்வில் ஊழல்களும் பெருகி விட்டன.

இந்த சூழ்நிலையில், ஆன்மிகநெறிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தநேரத்தில், உயர்ந்த நெறிமுறைகளை பராமரிப்பதில், எந்த ஒரு சமரசத்தையும் செய்துகொள்ள மாட்டேன் என்று , ஒவ்வொரு_குடிமகனும் இன்றே உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். பாஜக.,வுக்கு உள்ளேயும் தார்மீக நெறிமுறைகள் இன்னும்மேம்படுவது அவசியம். கட்சிக்காரர்கள் முறையற்ற செயல்களில் ஈடுபடுவதை அனுமதிக்க கூடாது என்று அவர் தெரிவித்தார்

Leave a Reply