சுஷில்குமார் ஷிண்டே இந்தியாவின் கவுரவத்தை குலைத்துவிட்டார் இந்து தீவிரவாதம் குறித்து பேசிய சுஷில்குமார் ஷிண்டே இந்தியாவின் கவுரவத்தை குலைத்துவிட்டார். இந்த விவகாரத்தில் இதுவரை சோனியா காந்தியும், மன்மோகன்சிங்கும் மவுனம்காப்பது ஏன்? என்பது புரியவில்லை. சுஷில்குமார் ஷிண்டேவை மந்திரி சபையிலிருந்து வெளியேற்றும் வரை நாங்கள் போராடுவோம் என்று பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் கருத்து தெரிவித்துள்ளார்

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; அடுத்தமாதம் கூடவுள்ள பாராளுமன்றத்திலும் இந்த கோரிக்கையை முன்வைத்து பாஜக. குரல் எழுப்பும், ஒருநாட்டின் உள்துறை மந்திரி எனும் முறையில் ஆர்எஸ்எஸ்., பாஜக. போன்றவை தீவிரவாதிகளை உருவாக்குவதாக நினைக்கிறீர்கள்.

நாங்கள்கூட இந்த முகாம்களில் கலந்துக்கொண்டுள்ளோம். எங்களையும் நீங்கள் தீவிரவாதிகளாக கருதுகிறீர்களா? அப்படி என்றல் , எங்களையும் சிறையில் தள்ளுங்கள் . ஆர்எஸ்எஸ்., பாஜக. போன்றவற்றை தீவிரவாத அமைப்புகளாக நீங்கள் கருதினால் , நீங்கள் ஏன் அவற்றை தடைசெய்யவில்லை?. தக்க ஆதாரங்கள் இருப்பின் அவற்றை ஏன் நீங்கள் வெளியிடவில்லை?

ஆர்எஸ்எஸ்.-ஐ போன்ற பெரியஇயக்கத்தில் யாராவது, எப்போதாவது அந்த இயக்கத்தின் பயிற்சி முகாம்களில் பங்கேற்றிருக்க கூடும். இதனைவைத்தே ஒட்டுமொத்த இயக்கமும்_ தீவிரவாத இயக்கம் என்பது அர்த்தமல்ல. இதைப்போன்று காங்கிரஸ் கட்சியிலும் நிகழ்ந்திருக்கலாம். குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீது சட்டம் தன்கடமையை செய்யட்டும்.

ஒருகுடும்பத்தில் கூட, தனி நபர் ஒருவர் செய்யும் ‘கிரிமினல்’ தனங்களுக்காக, அந்த ஒட்டு மொத்த குடும்பத்தையும் ‘கிரிமினில் குடும்பம்’ என்று கூறிவிட முடியாது என்று கூறினார்

Leave a Reply