காவி பயங்கரவாதம் காங்கிரஸின் ஊழலுக்கும் , நிவாக சீர்கேட்டுக்கும் , தேசத்தை பாதுகாக்க தவரியதிர்க்கும் எதிரான பாஜக , ஆர்.எஸ்.எஸ்,ஸின் போராட்டம். அது காங்கிரசுக்கு மட்டும் காவி பயங்கரவாதம். அன்று ஆங்கிலேயனுக்கு சுபாஸ் சந்திர போஸ், பால கங்காதர திலகர், லாலா லஜபதி ராய், அரவிந்த் கோஷ், வ. உ. சிதம்பரம் பிள்ளை போன்றவர்களும் அவர்களது அமைப்புகளும்

பயங்கர வாதிகளாகதான் தெரிந்தன. இன்றோ காங்கிரஷ்க்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ், போன்ற அமைப்புகளும் அதன் தொண்டர்களும் பயங்கர வாதிகளாக தெரிகின்றனர்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சிந்தனை முகாமில் பேசிய உள்துறை அமைச்சர் ஷிண்டே, ""பாஜக. ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) போன்ற அமைப்புகளை ஹிந்து பயங்கரவாதிகளை போன்று சித்தரித்துள்ளார்

அதாவது பாகிஸ்தான் ஒரு புறம் தீவிரவாதிகளை கடல் வழியாக அனுப்பி அப்பாவி மக்களை கொன்று குவிக்கிறது , இந்திய இராணுவத்தின் தலை கொய்து அவமதிக்கிறது. மறுபுறம் 2500க்கும் அதிகமான தீவிரவாதிகளுக்கு பயிற்சி தந்து, இந்தியாவுக்குள் நுழைய பாதை அமைத்து தந்து பாம் வைக்க துடித்து கொண்டிருக்கிறது.

ஆனால் நமது உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவோ இவற்றை எல்லாம் கவனிக்காமல் இவற்றை பற்றியெல்லாம் தங்கள் ( காங்கிரஸ்ஸின்) சிந்தனை முகாமில் பேசாமல், சிந்தனையற்ற முறையில் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, மாலேகான் குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்களை பாஜக, ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளுடன் தொடர்புப்படுத்தி. அவர்கள் பயிற்சி முகாம்களை நடத்தி ஹிந்து தீவிரவாதிகளை உருவாக்கி வருவதாகவும் . காவிப் பயங்கரவாதத்தை பரப்பி வருவதாகவும் பேசியுள்ளார் ,

இவரது கருத்தை லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீத் வரவேற்றுள்ளான் . அவன் ஒரு படி மேலேபோய் "இந்தியா மதசார்பற்ற நாடு என்று கூறி தீவிரவாதிகளை உருவாக்கி வருகிறது. எனவே இந்தியாவை தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும். இதை உள்துறை அமைச்சரே ஒப்புக்கொண்டு விட்டார்." என்று வழிமொழிந்துள்ளான். இவனது கருத்துக்கு கூட மறுப்பு தெரிவிக்க தைரியம் இல்லாமல் சிந்தனையில் உள்ளார் நமது உள்துறை அமைச்சர். எங்கே மறுப்பு எதுவும் தெரிவித்தால் குண்டு போட்டு விடுவானோ அல்லது ஒட்டு வங்கி கொள்ளை போகி விடுமோ என்ற தயக்கமாக கூட இருக்கலாம்.

இந்த ஹபீஸ் சயீத் மும்பை தீவிரவாத தாக்குதலின் முக்கிய மூளையாவான் . இவன் தனது சதி செயலின் மூலம் பல்லாயிர கணக்கான  ஹபீஸ் சயீத்  அப்பாவி மக்களின் உயிரை பரித்துள்ளான். இவன் இந்தியாவில் செய்த சதி செயலில் ஒரு சில சதவிதத்தை கூட அமெரிக்காவில் செய்திருக்க மாட்டான். ஆனால் அமெரிக்காவோ இவன் தலைக்கு ரூ. 50 கோடி பரிசு நிர்ணயித்துள்ளது.. இந்தியாவோ இவனை உத்தமன் போல் பேச வாய்ப்பு தந்து வாய்மூடி மௌனமாக உள்ளது.

இன்று நேற்று அல்ல இந்தியா சுதந்திரம் அடைந்த காலம்தொட்டே காங்கிரஸ்ஸின் இந்த நரித்தனம் தொடர்கிறது. நேரு 1948-ஆம் ஆண்டு காந்திஜி கொலைக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் தொடர்புண்டு என பொய் கூறி தடை செய்தார் . ஆனால் உச்சநீதிமன்றமோ காந்திஜி கொலைக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தீர்ப்பு கூறி தடையை நீக்கியது. 1962ஆம் ஆண்டு இந்திய-சீன போரில் ஆர்எஸ்எஸ் இயக்க தொண்டர்களின் அர்ப்பணிப்பை கண்டு மனம் நெகிழ்ந்த அதே நேரு. 1963-ஆம் ஆண்டு குடியரசு தின விழா அணிவகுப்பில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை கலந்துகொள்ளச் சொல்லி அழைப்புவிடுத்து சிறப்பித்தார்.

நெருக்கடிநிலை  ஆர்.எஸ்.எஸ் 1963-ஆம் ஆண்டு குடியரசு தின விழா காலத்தில் ஊடக துறையையே விட்டு வைக்காத இந்திரா காந்தி ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை மட்டும் விட்டு வைப்பார. அவர் பங்குக்கு அவரும் தடை செய்தார். பிறகு நெருக்கடிநிலை தகர்க்கப்பட்டபோது ஆர்.எஸ்.எஸ் மீதான தடையும் நீங்கியது. நரசிம்ம ராவ் ஆட்சி காலத்திலும் ஆர்.எஸ்.எஸ் மீது வீண்பழி சுமத்தி இயக்கத்தைத் தடை செய்ய முயன்று தோற்றுப்போனார்கள்

கோவை குண்டு வெடிப்பு நடந்தவுடன் அதற்க்கு காரணம் ஆர்.எஸ்.எஸ் என்று பொய்யுரைத்தார் அன்றைய காங்கிரஸ் தலைவர் . அதேபோன்று மும்பை தாக்குதலில் இந்து தீவிரவாதிகளுக்கு தொடர்புண்டு என்று பொய்யுரைத்தார் அன்றைய காங்கிரஸ் அமைச்சர் அந்துலே. இவர்கள் உண்மையை மறைத்து பொய்யை பாதுகாக்க முயன்றார்கள் அது முடியவில்லை அப்படி முடிந்திருந்தால் கோவை குண்டு வெடிப்புகளும், மும்பை பயங்கரவாத தாக்குதல்களும், மாலேகான் குண்டு வெடிப்பு பட்டியலில் அல்லவா இடம்பெற்றிருக்கும் அல்லது இடம்பெற செய்திருப்பார்கள்.

காவி கொடி ஏந்தி ஆட்சி புரிந்த வீர சிவாஜிதான் முகலாயர்களின் வளர்ச்சியை தடுத்தார். முகலாய ஆட்சிக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற காவி கொடி ஏந்திய சுதந்திர போராட்ட வீரர்களை கண்டுதான் ஆங்கிலேயன் அஞ்சினான், அதிர்ந்தான். காவி உடை தரித்த சுவாமி விவேகானந்தர்தான் நமது பாரதத்தின் பலம் பெருமையையும், இந்து மதத்தின் சிறப்பையும் உலகறிய செய்தார். இப்படி பட்ட காவி அந்நியர்களாகிய முகலாயர்களுக்கும் , ஆங்கிலேயர்களுக்கும், மதமாற்று வேடதாரிகளுக்கும் அச்சத்தை தந்திருக்கலாம்! ஏன் பயங்கரவாதியாக கூட தெரிந்திருக்கலாம்!. ஆனால் காங்கிரசுக்கும் அப்படியே தெரிவது ஏனோ?. அந்நியனின் பார்வையும் காங்கிரஸ்ஸின் பார்வையும் ஒன்றுதானா?. அந்நிய ஆட்சிக்கும் காங்கிரஸின் ஆட்சிக்கும் வேறுபாடு இல்லையா?

தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்

Leave a Reply