தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசுக்கு  உச்ச நீதிமன்றம்  கண்டனம் தமிழக காவிரிடெல்டா பகுதிகளில் சம்பா பயிர்களை காப்பாற்ற காவிரியிலிருந்து 12 டி.எம்.சி. தண்ணீரையாவது திறந்துவிட உத்தரவிடவேண்டும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுமீதான விசாரணை இரண்டு நீதிபதிகள்கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசுக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீர் வழங்கவேண்டும் என்பதை தெரிவிக்காத கண்காணிப்பு குழுவுக்கும் கண்டனம்தெரிவித்தனர்.

1992 முதல் ஒவ்வொரு வருடமும் கர்நாடக அரசு பயன் படுத்திய தண்ணீர் எவ்வளவு? நடுவர்மன்றம் அனுமதித்த தண்ணீர் எவ்வளவு? என்பதை தெரிவிக்கவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்

Leave a Reply