வாக்குறுதியின் கீழ்  ப. சிதம்பரம், சுஷில் குமார் ஷிண்டே மீது வழக்குப்பதிவு தனித்தெலுங்கானா விவகாரம் குறித்து சென்ற மாதம் 28ம் தேதி புது டெல்லியில் சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, ‘தெலுங்கானா விவகாரத்தில் இன்னும் ஒருமாதத்திற்குள் முடிவு எடுக்கப்படும்’ என வாக்குறுதி தந்திருந்தார் .

இந்தகெடு முடிவடைந்து விட்ட நிலையில், புதுடெல்லியில் நிருபர்களிடம் பேசிய குலாம்நபி ஆசாத், ‘தெலுங்கானா விவகாரத்தில் இன்னும் சிலதலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதால் தற்போது அவசரப்பட்டு எந்தமுடிவும் எடுக்கமுடியாது’ என கூறினார்.

இந்நிலையில், தனி தெலுங்கானா விவகாரத்தில் மக்களுக்கு தவறானவாக்குறுதி கொடுத்து மோசடி செய்ததற்காக ப. சிதம்பரம், சுஷில் குமார் ஷிண்டே ஆகியோர் மீது நம்பிக்கை மோசடிவழக்கு தொடுக்க நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்று ஆந்திர மாநில இளநிலை வழக்கறிஞர்கள் சங்கம் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தது.

இந்தமனுவின் மீது விசாரணை நடத்திய நீதிபதி, ‘தனி தெலுங்கானா விவகாரத்தில் தவறான வாக்குறுதியை தந்த மத்திய மந்திரிகள் ப. சிதம்பரம், சுஷில் குமார் ஷிண்டே ஆகியோர் மீது இந்திய குற்றப் பிரிவு (தடுப்பு) சட்டம் 420-ன் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளிக்கிறேன்’ என உத்தரவிட்டார். பொய் வாக்குறுதி என்று பார்த்தல் நாராயணசாமி உளப்பட ஒரு அமைச்சரும் தேற மாட்டார்

Leave a Reply