கொல்கத்தாவில் பெண்ணிடம்   சில்மிஷத்தில் ஈடுபட்ட எல்லைப் பாதுகாப்புபடை வீரர்கள் கொல்கத்தாவில் மக்கள் நடமாட்டம் மிக்க பகுதியில் நின்று கொண்டிருந்த பெண் பத்திரிகையாளரை அங்கு குடிபோதையில் வந்த எல்லைப் பாதுகாப்புபடை வீரர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது

சில்மிஷத்தில் ஈடுபட்டபோது அந்தப்பெண் கூச்சலிட்டதால் . சத்தம்கேட்டு பொதுமக்கள் ஒன்றுதிரண்டு அந்த பாதுகாப்புபடை வீரரை பிடித்து அடித்து உதைத்தனர். பிறகு சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினர் அந்த வீரரை மீட்டு கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறும்போது, ‘இரவு உணவுவிடுதியில் இருந்து நான் வெளியேவந்தபோது சீருடை அணிந்த 2 எல்லைப் பாதுகாப்புபடை வீரர்கள் குடிபோதையில் இருந்தனர். என்னை பற்றி தரக்குறைவான முறையில் விமர்சித்தனர். அதில் ஒருவர் என்னை உரசியபடிசென்றார். அவரது செய்கையை என்னால் வெளிப்படையாக கூறமுடியாது’ என்றார்.

Leave a Reply