ஆதிபகவன் திரைப்படத்தை  இந்து அமைப்பினருக்கு திரையிட்டுக் காட்டவேண்டும்  அமீர் இயக்கி விரைவில் வெளிவர இருக்கும் ஆதிபகவன் திரைப்படத்தில் இந்துகடவுள்கள் பற்றி அவதூறு காட்சி இருப்பதாக தகவல் வெளிவருவதால், அந்த படத்தை இந்து அமைப்பினருக்கு திரையிட்டுக் காட்டவேண்டும் என்று உச்சநீதிமன்ற வழக்குரைஞர்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, எம்.துரைசெல்வன் ஆகியோர் சென்னைபெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

அவர்கள் இது குறித்து மேலும் தெரிவித்ததாவது ; ஆதிபகவன் என்பது இந்துக்களின் முழுமுதற் கடவுள்களான சிவனையும், விநாயகரையும் குறிக்கிறது . எனவே இந்த படத்தின் பெயரை மாற்ற வேண்டும் .

மேலும் இந்த திரைப் படத்தில் இந்துக்களையும், இந்துகடவுள்களையும், இந்து மத நம்பிக்கையையும் அவமதிக்கும் விதமாக காட்சிகள் இருப்பதாக எங்களுக்கு தகவல்கள்வருகின்றன. எனவே இந்தப்படத்தை திரையிடுவதற்கு முன்பு, படத்தை இந்து இயக்கங்களின் நிர்வாகிகளுக்கு திரையிட்டுக் காட்டவேண்டும். அவர்களின் அனுமதியை பெற்றபின்னரே படத்தை திரையிட வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Leave a Reply