விஸ்வரூபம் திரைப் படத்தைத் திரையிடலாம் ; சென்னை உயர்நீதிமன்றம் பெரும் எதிர் பார்ப்புக்கு மத்தியில் விஸ்வரூபம் திரைப் படத்தைத் திரையிடலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .இப்படத்தைத் தமிழகம் முழுவதும் திரையிடலாம் என நீதிபதி வெங்கட்ராமன் அனுமதி தந்தார் .

விஸ்வரூபம் படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி கமல்ஹாசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார். அதே போன்று மாவட்டங்களில் படத்தைத் திரையிட கலெக்டர்கள் பிறப்பித்துள்ள தடையை நீக்கக்கோரியும் தனியாக ஒருவழக்கையும் அவர் தொடர்ந்தார்.

இந்நிலையில் ஒரு வழியாக நேற்று பத்துமணிக்கு மேல் தீர்ப்பு வெளியானது. அதன்படி விஸ்வரூபம் படத்திற்கு ஜனவரி 24ம்தேதி தமிழக அரசு விதித்த தடைஉத்தரவு நீக்கப்படுகிறது. விஸ்வரூபம் படத்தை தமிழகம்முழுவதும் நாளை முதல் திரையிடலாம் என நீதிபதி அறிவித்தார். மேலும் தனிமனித சுதந்திரத்தில் அரசு தலையிட முடியாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்.

அதே போல பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர்கள், காவல் துறை அதிகாரிகளால் பிறப்பிக்கப்பட்ட 144 தடைஉத்தரவுக்கும் தடை விதித்து நீதிபதி வெங்கட்ராமன் உத்தரவிட்டார்.

Leave a Reply