மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு  நாடுமுழுவதும்  நினைவஞ்சலி செலுத்தப்பட்டது மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு நாடுமுழுவதும் அவரது திருவுருவச்சிலைக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. டெல்லி ராஜ் காட்டில் அமைந்திருக்கும் அவரது நினைவிடத்தில் நடந்தநிகழ்ச்சியில், ஜனாதிபதி

பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் . சோனியா காந்தி, மூத்த பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி, சுஷ்மா சுவராஜ் மற்றும் முப்படை தளபதிகள் ஆகியோரும் காந்தி நினைவிடத்தில் அஞ்சலிசெலுத்தினர்.

காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு அங்கு கூட்டுபிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது . பக்தி பாடல்கள் பாடப்பட்டன.

Leave a Reply