தமிழகத்தை விட்டு கமல் எங்கும் போகக்கூடாது தமிழகத்தை விட்டு கமல் எங்கும் போகக்கூடாது என பாஜக வேண்டுகோள் விடுத்துள்ளது. மதச்சார்பற்ற மாநிலம் அல்லது வேறுநாட்டுக்குப் போவதாக கமல் சமிபத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக; “கமல்ஹாஸன் மத சார்பற்ற மாநிலம் அல்லது நாடு தேடிப்போவதாகக் கூறியிருப்பது எங்களை வருத்தப்பட வைத்துள்ளது. கமல் அவர்களே.. தமிழ்நாட்டை விட்டு நீங்கள் எங்கும் போகக்கூடாது. இந்த முடிவை நீங்கள் மாற்றிக் கொள்ளவேண்டும். தமிழகத்தின் கலை சொத்தான நீங்கள் தமிழகத்தில் தான் இருக்கவேண்டும். தமிழக அரசு அவரைக் காக்கவேண்டும்,” என கருத்து தெரிவித்துள்ளது

Leave a Reply