கட்சி தலைவர்கள் கட்டுப்பாட்டுடன் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும் கட்டுப்பாட்டுடன் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்சியினருக்கு பா.ஜ.க தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

தில்லியில் இருக்கும் கட்சி தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை கட்சித்தலைவர்கள், தொண்டர்கள் மத்தியில் மேலும் அவர் பேசியதாவது.

மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களில் கட்சியினர் பங்கேற்கவேண்டும். அப்போது தான் அவர்களின் நம்பிக்கையை பெறமுடியும். தவறான நடவடிக்கை மூலம் மக்களின் நம்பிக்கையை ஆளும்கட்சி இழந்து விட்டது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

கட்சியினர் எந்த சூழ்நிலையிலும் அமைதியை இழந்துவிட கூடாது. மிகபொறுப்புணர்வுடன் செயல்படவேண்டும். கட்சியில் இருக்கும் தலைவர்கள் கட்டுப்பாடுடன் பேசவேண்டும். ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும். மற்றவர்கள் சுட்டிக் காட்டும் அளவுக்கு கட்சித்தலைவர்களின் நடவடிக்கைகள் இருக்கக்கூடாது என ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply