ஷிண்டேவின்  பொய் குற்றச்சாட்டை மக்கள்மன்றத்துக்கு  எடுத்துச் செல்வது  குறித்து பாஜக. ஆர்எஸ்எஸ், விஎச்பி ஆலோசனை பாஜக. ஆர்எஸ்எஸ், விஎச்பி போன்ற அமைப்புகளின் மூத்த தலைவர்கள் டில்லியில் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பில் பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத்சிங், மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், பாஜக மூத்த தலைவர்கள் முரளி

மனோகர் ஜோஷி ஆர்எஸ்எஸ் அமைப்பின் பையாஜிஜோஷி, சுரேஷ் சோனி, வி.எச்.பி தலைவர் அசோக்சிங்கால், பிரவீண் தொகாடியா உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர் .

இதில் , ஆர்எஸ்எஸ், பாஜக போன்ற அமைப்புகள் பயங்கரவாத பயிற்சி முகாம்களை நடத்தி வருவதாக அபாண்ட பொய் குற்றச்சாட்டை சுமத்திய மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே, காங்கிரஸ் கட்சிக்கு தகுந்தபதிலடி தருவது குறித்தும் , இந்த பொய் குற்றச்சாட்டை மக்கள்மன்றத்தில் எடுத்துச்சென்று நீதிகேட்பது குறித்தும் . வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்காக இப்போது இருந்தே தயாராகவேண்டியது குறித்த அவசியத்தையும் , பாஜக – ஆர்எஸ்எஸ் – விஎச்பி இடையே ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டதாக தெரிகிறது.

Leave a Reply