செழுமையாக வளர இடம் தந்து  , உரம் தந்து  , வாய்ப்பு தந்த தோப்பை குறைகூறுவதா?. நான் முஸ்லிம் என்பதால், அரசியல்வாதிகளால் மிரட்டப்படுகிறேன். நான் இந்தியனாக இருந்த போதிலும், வேறுபடுத்தப்படுகிறேன். என்னை மும்பையைவிட்டு வெளியேற்றவும், பாகிஸ்தானுக்கு விரட்டவும் மிரட்டுகிறார்கள். இதை யாரும் குப்பனோ, சுப்பனோ சொல்லவில்லை.

சும்மா படத்தில் சுத்தி சுத்தி பறந்து பறந்து வில்லன்களை வீழ்த்தியவரும், தனி ஒரு நபராக சென்று தீவிரவாதிகளை தீர்த்து கட்டியவருமான (சும்மா படத்தில் பா) நம்ம பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கான் சொன்னது.

தங்கள் நாட்டு மக்களுக்கு, ஏன் தனக்கே! சரியான பாதுகாப்பு இல்லாத பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் இந்திய குடிமகனான ஷாருக்கானுக்கு பாதுகாப்பு தரவேண்டும் என்று அறிக்கை விடுகிறார் . நித்தம் நித்தம் அப்பாவி மக்களை குண்டு வைத்து கொன்று, அவர்களது பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கி கொண்டிருக்கும் லஷ்கர்-இ-தொய்பா தலைவன் ஹபீஸ் முகமது சயீத் பதறுகிறார், பாகிஸ்தானுக்கு வந்துவிடுங்கள் என்று கதறுகிறார்.

ரஹ்மான் மாலிக்குகளும் , ஹபீஸ் முகமது சயீத்களும் அறிக்கை விடும் அளவுக்கு போலி சிறுபான்மை வேடதாரிகலான காங்கிரஸ் தலைவர்கள்தான் நடந்துகொள்வார்கள். ஆனால் அந்த பட்டியலில்  சிறுபான்மை அடையாளத்துடன் பெரும்பான்மையினரின் வெகுமதிப்பை பெற்ற ஷாருக்கான் இடம் பெற்று இருப்பது வருந்த தக்கது.

பொதுவாக பாலிவுட்டை பொறுத்தவரை மிரட்டல்களும் , உருட்டல்களும், பேரங்களும் 1970, 1980களில் மெல்ல மெல்ல வளர்ந்து தாவுத் இப்ராஹிம் காலத்தில் அதாவது 1990 , 93களில் உச்சத்தில் இருந்தது. இதில் ஒரு சில உயிரிழப்புகளும் அடக்கம். 1993 ஆம் ஆண்டு மும்பை தொடர்குண்டு வெடிப்புகளும், தாவுத் இப்ராஹிமுக்கு அதனுடனான முக்கிய தொடர்புகளும் அவனது சாம்ராஜ்யத்துக்கு வேட்டு வைத்தது.

நிலைமை இப்படி இருக்க ஏதோ இவர்தான் புதிதாக மிரட்ட படுவதை போன்ற பிம்பத்தை உருவாக்கியுள்ளார். சிறுபான்மை வேடம் தரித்துள்ளார். மிரட்டப்பட்ட இவர் சிறுபான்மை இனத்தவர் என்றால் , ஒருகாலத்தில் பாலிவுட்டையே மிரட்டி, உருட்டி வந்த தாவுத் இப்ராஹிம் யார்?. 2008 ஆம் ஆண்டு ஷாருக்கானை மிரட்டிய இந்தியன் முஜாஹிதின் யார்?.

ஜட்டி முதல் டூத் பேஸ்ட் வரையிலான விளம்பர வருமானம் ஒருபக்கம். ஒரு படத்தில் நடிக்க 30 கோடிக்கு மேல் சம்பளம் , இது போதாது என்று கிரிக்கெட் என்ற பெயரிலும் பல நூறு கோடி வருமானம். இப்படி . பணமும் புகழும் சேர சேர அதற்க்கு ஏற்றார்போல பகையும் எதிர்ப்பும் எழுவது சகஜமே. ஒரு தோப்பில் பல நூறு மரங்கள் மத்தியில் உயர்ந்த ஒரு மரம் மற்றவர்கள் கண்ணை உருத்ததான் செய்யும். இதற்காக தன்னை செழுமையாக வளர இடம் தந்த , மற்ற மரங்களை விட உயரமாக் வளர உரம் தந்த, வாய்ப்பு தந்த தோப்பை குறைகூறுவதா?.

தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்

Leave a Reply