'ஹேக்' செய்யப்பட்ட ட்விட்டர் ட்விட்டர் இணைய தளம் 'ஹேக்' செய்யப்பட்டு விட்டதாகவும் , சுமார் கிட்டத்தட்ட 2,50,000 பயனாளிகளை பற்றிய தகவல் திருடப்பட்டு ள்ளதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது .

ஹேக்கர்கள் ட்விட்டர் பயனாளிகளின் தகவல்களை திருட முயற்சிமேற்கொள்ளப் பட்டதை கண்டறிந்ததும்,உடனே குறிப்பிட்ட 'பிளாக்' கை மூடியதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதே நேரம் ஹேக்கர்கள், சுமார் 250,000 பயனாளிகளின் யூசர்நேம் ( user name), இ மெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்ட்கள் போன்றவற்றை திருடியிருக்கலாம் என்றும், எனவே புதியபாஸ்வேர்டுகளை உருவாக்கி கொள்ளுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தி தாங்கள் இ மெயில் அனுப்பி இருப்பதாகவும் ட்விட்டர் தள நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply