டீசல் விலை உயர்வு  நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பிரச்னையை எழுப்புவோம் மாதம் மாதம் டீசல் விலையை ரூ 50 பைசா உயர்த்துவது என்ற முடிவுக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் சரத் யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது மத்தியில் காங்கிரஸ் கூட்டணி பொறுப்பேற்றதிலிருந்து விலைவாசி உயர்வு, லஞ்சம் , வேலையில்லா திண்டாட்டம் அன்றாடம் நிலவிவரும் பிரச்னைகளாக உருவெடுத்துள்ளது.

இது பற்றி தே.ஜ., கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப் படவுள்ளது. பிறகு , பிப்ரவரி 21-ம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விலைவாசிஉயர்வு குறித்த பிரச்னையை எழுப்பி அரசுக்கு நெருக்கடி தருவோம் என்று தெரிவித்தார்.

Leave a Reply