குஜராத் கலவரத்தை வைத்துக் கொண்டு, திட்டமிட்டு சதி செய்து பாஜக மீது களங்கமும், பழியும் சுமத்தப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கலவரங்களே நடக்கவில்லையா?. மனிதர்களிடையே வேற்றுமையை உருவாக்கி , அதன் மூலம் அரசியல் நடத்தினோம் என யாராவது குற்றம் சுமத்த முடியுமா? என பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுதில்லியில் இருக்கும் பாஜக அலுவலகத்தில், ராஜ்நாத்சிங்கை இஸ்லாமிய தலைவர்கள் சந்தித்தனர். அப்போது, அவர்களிடம் ராஜ்நாத்சிங் பேசியதாவது: மக்களை பிளவுப்படுத்தும் மற்றும் வேற்றுமைப்படுத்தும் அரசியலில் பாஜக.,வுக்கு நம்பிக்கை கிடையாது.

திட்டமிட்ட சதிமூலம் பாஜக தொடர்ந்து பழி சுமத்தப்பட்டும் வருகிறது. வாஜ்பாய் மத்தியில் பிரதமராக இருந்த போது நீங்கள் அனைவருமே எங்கள் ஆட்சியை நேரடியாக பார்த்திருப்பீர்கள். அப்போது, மனிதர்களிடையே வேற்றுமையை உருவாக்கி , அதன் மூலம் அரசியல் நடத்தினோம் என யாராவது குற்றம் சுமத்த முடியுமா?

ஹிந்து, முஸ்லிம்கள் மத்தியில் பகைமையை உருவாக்கி , அதன் மூலம் அரசியல்நடத்தும் கட்சி பாஜக என்று எங்களுக்கு எதிரான கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. பரவலாக காணப்படும் இந்தகுழப்பத்தை முறியடிக்க முஸ்லிம்களால்தான் முடியும். இந்த முயற்சி தில்லியிலிருந்து தொடங்கப்பட வேண்டும்.

நாங்கள் ஆட்சியமைக்க விரும்பினால், அந்த அரசு நீதி மற்றும் மனிதாபிமானம் மீதுதான் அமையும். நாட்டில் பல முறை கலவரங்கள் நடந்திருக்கின்றன. காங்கிரஸ் ஆட்சியில் கலவரங்கள் நடக்கவில்லை என யாரும் சொல்ல முடியுமா? ஏராளமான கலவரங்கள் காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் நடைபெற்றிருக்கின்றன என உறுதியாக கூறமுடியும்.

பல மாநிலங்களில் பாரதிய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கெல்லாம் கலவரம் நடக்கிறதா? அப்படி இருக்கையில், பா.ஜ.க கலவரத்தை தூண்டிவிடுகிறது என எப்படி சொல்லமுடியும்? என கேள்வி எழுப்பினார்?.

Leave a Reply