இஸ்லாம் மதத்தினைப் பற்றி ஒரு சினிமா எடுக்கப்பட்டால் அதற்கு ஆயிரத்தெட்டு தடை, பிறகு சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம். இறுதியில் அரசாங்கமே வரிந்துகட்டிட்டு வரும் சூழ்நிலை. கேட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்னை என்ற வியாக்கியானம் வேறு,

நீர்ப்பறவை என்ற சினிமாவில் ஒரு பாடல் வரியில் கிறிஸ்துவ மதத்தினை பற்றி இருந்ததால் அந்த பாடலையே நீக்கி பிறகு அது வெளிவந்த வரலாறு நம் அனைவருக்கும் நன்கு தெரியும்.

தற்போது சுடச்சுட எனும் பெயரில் ஒரு திரைப்படம் வெளிவர போகிறது, இது "A" சான்றிதழ்  பெற்ற திரைப்படம். அதாவது  ஆபாசத் திரைப்படம் ஆகும். இதன் SUBTITLE- ல் ஹிந்து மதத்தினை இழிவு படுத்துவது போல "சம்பவாமி யுகே யுகே", என்ற ஒரு வரி உள்ளது, இந்த "சம்பவாமி யுகே யுகே", நமது புனிதமான பகவத்கீதையில் பகவான் கூறிய ஸ்லோகம் ஆகும்,

நம் நாட்டின் நிலைமையை பாருங்கள் 80 சதவிதத்தினருக்கும் ஹிந்துக்கள் அதிகமாக வசிக்கும் பாரதத்தில் பகவான் கூறிய வாசகத்தினை ஆபாசப்படத்தில் போட்டு சித்தரிக்கிறார்கள்,

இதனைத் தட்டிக் கேட்க ஒரு நாதியும் இல்லை, இதை சொன்னால் என்னை மதவெறியன்னு சொல்லுறாங்கப்பா.

நன்றி ; ராம்குமார்

Leave a Reply