நரேந்திர மோடிக்கு நாடுதழுவிய செல்வாக்கு இருக்கிறது நரேந்திர மோடிக்கு நாடுதழுவிய செல்வாக்கு இருக்கிறது. அவர் சில வருடங்களாக தேசியத்தின் அடையாளமாக உருவெடுத்துவருகிறார். அவர் நல்ல நிர்வாகத்தை அளித்து வருகிறார் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

இது மேலும் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:

நரேந்திரமோடி சில ஆண்டுகளாக தேசியத்தின் அடையாளமாக உருவெடுத்து வருகிறார். அவர் நல்லநிர்வாகத்தை தந்து வருவதோடு, பயங்கரவாதத்தையும் திறம்படச் சமாளித்து வருகிறார். அவர் குஜராத்தின் முதல்வராக இருந்தாலும், அவரது புகழ் மாநிலத்தை தாண்டியும் வளர்ந்துவருகிறது. அவருக்கு நாடுதழுவிய செல்வாக்கு இருக்கிறது என்று கூறினால் அது தவறல்ல .

இருப்பினும் பாஜக.வில் எந்தவிதமான சவலாலையும் சமாளிக்கக்கூடிய திறமையான பலதலைவர்கள் இருப்பதை கண்டு பெருமைப்படுகிறோம்.

பிரதமர் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது என்பது பற்றி முடிவு உரியநேரத்தில் எடுக்கப்படும். ஒருவர் பிறந்த_குடும்பத்தின் அடிப்படையில் தலைவர்களைத் தேர்வுசெய்யும் கட்சி பாஜக. அல்ல. எங்கள் கட்சியில் அனைவருமே அர்ப்பணிப்பு உணர்வு மிக்கதொண்டர்களாக இருந்து, கடின உழைப்பின் மூலம் முக்கியப்பொறுப்புக்கு வருகின்றனர்.

விலைவாசி உயரும் போதெல்லாம் மக்களின் துன்பத்தை கண்டு மத்திய ரசு மகிழ்ச்சிகொள்கிறது என்றார்.

Leave a Reply