வசுந்தரராஜே சிந்தியா பாஜக முதல்வர் வேட்பாளர் ராஜஸ்தான் சட்டசபைதேர்தலில் பாஜக வெற்றிபெற்றால் வசுந்தரராஜே சிந்தியாதான் முதல்வர் என பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் அறிவித்திருக்கிறார்.

ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. பாஜக எதிர்க்கட்சியாக இருக்கிறது.

இந்நிலையில் பாஜக புதிய தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ராஜ்நாத் சிங் டெல்லியில் ராஜஸ்தான் மாநில பாரதிய ஜனதா நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு ராஜஸ்தான் மாநில பா.ஜ.க தலைவராக, முதல்வர் வேட்பாளராக வசுந்தர ராஜே சிந்தியாவை அறிவித்தார்.

இம்முடிவு குறித்து கருத்துதெரிவித்த வசுந்தரராஜே, கட்சித்தலைமையின் அறிவிப்பு மகிழ்ச்சி தருகிறது . பாஜக ஒருகுடும்பமாக இணைந்து வரவிருக்கும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வோம் என்றார்.

Leave a Reply