பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் சில்லறை வணிகத்தில் அன்னியநேரடி முதலீடு  வாபஸ் பெறப்படும் மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் சில்லறை வணிகத்தில் அன்னியநேரடி முதலீடு திட்டம் வாபஸ் பெறப்படும் என பா.ஜ.க. தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.

ம.பி தலைநகர் போபாலில் நடந்த விவசாயிகள் பேரணி பொதுக்கூட்டத்தில் கலந்து கொ?ண்டு பேசிய பா.ஜ.க. ராஜ்நாத்சிங், விவசாயிகள் கடன் தள்ளுபடி திட்டத்தில் பல கோடி ரூபாய் செலவிடப்பட்ட நிலையிலும், அதன்பலன்கள் விவசாயிகளை சென்றடையவில்லை என தலைமை கணக்கு தணிக்கையர் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

மூன்றரை கோடி விவசாயிகளின் கடன்கள் ரத்துசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதில் முறைகேடுகள் நடந்துள்ளன. இந்த முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.

சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது, தேச நலனுக்கு எதிரானது. குறிப்பாக, விவசாயிகள் நலனுக்கு எதிரானது. இந்த முடிவை பிரதமர் திரும்பப்பெற வேண்டும். அவர்கள் அதைச் செய்யாவிட்டால், மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், அந்தத் திட்டம் திரும்பப் பெறப்படும்.

நாட்டின் பொருளாதாரம் தடம்புரண்டு சீர்கேடான நிலைக்கு போய் இருப்பதற்கு மத்திய அரசின் தவறான கொள்கைகள்தான் காரணம் ஆகும். நாட்டின் விடுதலைக்கு பின்னர் உருவாக்கிய கொள்கைகள், விவசாயம் சார்ந்ததாக இல்லை. விவசாயத்தின்மீது கவனம் செலுத்தப்படவில்லை. எனது விருப்பம், இந்த நாட்டை உண்மையான பாரதமாக உருவாக்க வேண்டும் என்பதுதானே தவிர, இன்னொரு அமெரிக்காவாகவோ, ரஷியாவாகவோ, சீனாவாகவோ மாற்றுவது அல்ல.

விவசாயிகள் ஒவ்வொருவரும் தங்கள் மகனும் விவசாயி ஆக வேண்டும் என்று எப்போது நினைக்கிறார்களோ அப்போதுதான் இது சாத்தியமாகும். மகாத்மா காந்தி வேலை வாய்ப்புறுதி திட்டத்தில் விவசாயத்தையும் மத்திய அரசு சேர்க்க வேண்டும். மாவட்ட அளவில் விதை வங்கிகளை உருவாக்க வேண்டும் எ?ன்று ராஜ்நாத் சிங் கூறினார்.

Leave a Reply